கத்தியால் குத்தி சகோதரன் படுகொலை!

murder 178678

குடும்பத் தகராறு காரணமாக தனது உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரன் ஒருவர், கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தக் கொலையுடன் தொடர்புடைய மூத்த சகோதரன் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version