static image cdn
செய்திகள்அரசியல்இலங்கை

அண்ணே எனக்கும் ஒரு காஸ் தாங்கோ!! – பின்னால் சென்ற எம்.பி!!

Share

 

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு களை கட்டியுள்ள நிலையில் எரிவாயு வாகனத்தை துரத்தி சென்று எம்.பி ஒருவர் காஸ் கொள்வனவு செய்த சுவாரஸ்ய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா க​மகே. அவருடைய வீட்டில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு தீர்ந்து விட்டதையடுத்து எரிவாயு தேடிக்கொண்டு வீதியில் அலைந்து திரிந்துள்ளார்.

இந்நிலையில், பெலவத்தையிலுள்ள லிட்ரோ முகவரிடம் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்குச் சென்றபோது காஸ் தீர்ந்துவிட்டது.

சளைக்காத அவர் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் அத்துருகிரியவில் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கும் சென்றுள்ளார். ஆனால் தொடர் ஏமாற்றம்.

இன்றைய நாள் எனக்கு காஸ் வாங்குவதுடனேயே சென்று விடுமோ? என எண்ணிய சமயம் அவருடைய கண்களில் நீலநிற எரிவாயுக்களை ஏற்றிய நீண்ட வண்டி ஒன்று தென்பட்டுள்ளது.

உடனடியாக அத்துருகியவில் இருந்து துரத்திய அவர் ஒருவாறு ஒருவல பிரதேசத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்னால் மடக்கி பிடித்தார்.

பின்பு தன்னை பாராளுமன்ற உறுப்பினர் என அறிமுகப்படுத்திய அவர் காஸ் முகவர் நிலையத்தில் சிலிண்டர்கள் இறக்கப்பட்டதன் பின்னர், சிலிண்டொன்றை வாங்கிக்கொண்டு வீடுத் திரும்பியுள்ளார்.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...