அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு பிரித்தானியா புதிய திட்டமென்றை பிரான்சிடம் தெரிவித்துள்ளது.
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, பிரித்தானிய காவல்துறை பிரான்ஸ் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.
அத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிராகரித்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அகதிகள் வருவதை தடுக்க பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகையான நிதி கொடுத்தும் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை கூடியவறே உள்ளதென பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் கூறியுள்ளார்.
ஆனால், அத்திட்டம் தமது இறையாண்மையை மீறும் என பிரான்ஸ் நிராகரித்துவிட்டதாக பிரீத்தி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர் , பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் காவல்துறை இணைந்து ஆங்கிலக் கால்வாயில் ரோந்து செல்லும் ஒரு திட்டம் தொடர்பில் இன்னும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
#world
Leave a comment