வடக்கு மாகாணத்தில் நாளைமுதல் பூஸ்டர்

ooster

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் நாளை புதன்கிழமை முதல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக சுகாதாரத் தரப்பினர், படைத் தரப்பினர் உட்பட முன்களச் செயலாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

அடுத்து நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilanka

Exit mobile version