முல்லைத்தீவு புதுக்குடியிப்பு பகுதியிலிருந்து வெடிகுண்டுகளை கடத்திய ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் விடுவிக்கபட்ட குறித்த காணியிலிருந்து இரும்புக்காகவே இரண்டு வெடிகுண்டுகள் கடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவ்விரு பாரிய குண்டுகளையும் இரும்புக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச்செல்ல முற்பட்டபோதே கைவேலி பகுதியைச் சேர்ந்த, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தப்பட்ட ஒவ்வொரு குண்டும் சுமார் 400 கிலோகிராம் நிறை கொண்டவை என தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews