இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து வெடிகுண்டு ஒன்று காலை மீட்கப்பட்டது.
காணி உரிமையாளர் விவசாய தேவைக்காக நிலத்தை பண்படுத்தியவேளை குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் குறித்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.
#SrilankaNews