திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் மிதிவெடி வெடித்ததில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (12) மாலை 3.50 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் இக்பால் நகர் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் தோப்பூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SrilankaNews