25 67be1398d1cd3 770x470 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா தப்பிச் சென்ற படகை செலுத்திய யாழ் இளைஞன் அதிரடி கைது!

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகைச் செலுத்திய இளைஞன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனைக் கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், படகின் உதவியாளராகச் செயற்பட்ட மற்றுமொருவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் இதுவரையில் 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவர்களில் சிலர் தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகைக் கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப் படகு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் படகு, இஷாரா தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னரே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...