அகதிகளின் உயிரை பறித்த படகு – 75பேர் சாவு

liby094557

refugees

படகு கவிழ்ந்ததில் 75 அகதிகள் சாவடைந்துள்ளனர்.

லிபியா அருகே மத்தியரதரைக் கடலில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 75 போ் சாவடைந்துள்ளதகாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் அடைக்கலம் தேடி சென்று கொண்டிருந்த வேளையில் அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது.

அதில் வந்த அகதிகளில் 15 பேரை மட்டும் மீனவா்கள் மீட்டு லிபியா அழைத்துச் சென்றனா்.

கடந்த வாரம் நேரிட்ட இந்த விபத்து குறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்பு சனிக்கிழமை தகவல் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 420 அகதிகளை இத்தாலிய கடலோரக் காவல் படை மீட்டுள்ளது.

அவா்களில் 70 போ் இத்தாலிக்குச் சொந்தமான லாம்பெடுசா தீவுக்கு அழைத்து வரப்பட்டதாக இத்தாலி செய்திகள் தெரிவிக்கின்றன.

#world

Exit mobile version