உயிர் நண்பனுக்காக நண்பர்களால்!! – சாவகச்சேரி இந்துவில் உதிரம் கொடுத்த இளைஞர்கள்

நண்பனின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

அமரர் நேசதுரை நிலக்சன் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட கண்டு அறக்கொடை நிதியத்தினரால் , இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்த இரத்ததான முகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த இரத்த தான முகாமில் பெருமளவானோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களிற்கான அத்தியாசிய உணவுப் பொருட்களும் இரத்ததான முகாமில் வைத்து வழங்கப்பட்டன.

270050895 295460952546436 147794429403077581 n   

#SriLankaNews

 

Exit mobile version