யாழ்ப்பாணம் – சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இரத்த தான முகாம் நாளை நடைபெறவுள்ளது.
அமரர் நேசதுரை நிலக்சன் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட கண்டு அறக்கொடை நிதியத்தினரால் , இந்தக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமரர் நேசதுரை நிலக்சன் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு அவர்களது நண்பர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த இரத்த தான முகாமில் கலந்துகொண்டு உதிரம் கொடுத்து உயிர் காக்க வருமாறு கண்டு அறக்கொடை நிதியத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews