ஆப்கானிஸ்தான் மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஈத்கா என்ற மசூதியில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்குமென சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இக் குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் , 32 பேர் காயமடைந்துள்ளனர், இதுவரை 3 பேரை கைது செய்துள்ளோம் என அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி சயீத் கோஸ்டி தெரிவித்துள்ளார்.
மேலும் இத் தாக்குதலை எந்த அமைப்பும் பொறுப்பேற்றக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment