பெண்ணொருவர் அழுதமைக்காக மருத்துவமனையில் கட்டணம் அறவிடப்பட்ட விநோத சம்பவம்
அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை சென்றுள்ளார். மச்சத்தை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது பயத்தில் அவர் அழுதுள்ளார்.
சிகிச்சையின் பின்னர் வழங்கப்பட்ட கட்டணப்பட்டியலில் சிகிச்சைக்கான கட்டணமாக 223 டொலரும், சிகிச்சையின் போது அழுதமைக்காக பிரீஃப் எமோஷன் என்ற பெயரில் 11 டொலரும் கட்டணமாக அறவிடப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பெண்மணி தனது டுவிற்றர் பக்கத்தில் தனக்கு மருத்துவமனையில் அளித்த கட்டண பற்றுச்சீட்டைப் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அழுகைக் கட்டண விவகாரம் பேசுபொருளாக மாறி வருகின்றது.
Leave a comment