BIDEN PUTIN
செய்திகள்உலகம்

பேச்சுவார்த்தையில் பைடனுக்கும் புட்டினுக்கும்…

Share

ஜோ பைடனுக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

உக்ரைன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஜோபைடனுக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாளை மறுதினம் இணையத்தளத்தினூடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.

உக்ரேனுக்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்றை ரஷ்யா மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னதாக அமெரிக்க இராஜங்க செயலாளர் அந்தனி பிளிங்கன் தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பான இறுதி தீர்மானத்தை விளாடிமீர் புட்டின் மேற்கொண்டுள்ளாரா? என்பது குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை மறுத்துள்ள ரஷ்யா, உக்ரைன் தமது படையணியினரை பலப்படுத்தி வருவதாகவும் தாம் போருக்கு ஆயுத்தமாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா 94,000 துருப்பினர் உக்ரைனுடனான எல்லை பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர, இராணுவ கனரக வாகனங்கள் மற்றும் மின்னணு போர் முறைமை தொகுதிகளை அனுப்பியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை மறுதினம் இணையத்தளத்தினூடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

29 6
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது....