நாட்டின் பொருளாதாரச் சுமையை வெளிப்படுத்தும் முகமாகவும், எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும் நாளை புதன்கிழமை வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிளில் சபை அமர்வுக்குச் செல்லவுள்ளனர்.
வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் கட்சி பேதமின்றி காலை 9 மணிக்கு வலி. வடக்கு ஆரம்பிக்கும் இடமாகிய சுன்னாகம் திருஞானசம்பந்தா வித்தியாலயத்தில் இருந்து சைக்கிள் பேரணி ஆரம்பமாகி, கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள பிரதேச சபைத் தலைமையகத்தைச் சென்றடைந்து, 9.30 மணிக்கு பிரதேச சபையின் மார்ச் மாத அமர்வு நடைபெறும்.
நாட்டில் பொருள்களின் விலை எகிறல், பொருளாதார சுமை, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற வாழ்க்கைச்சுமையை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இதனைக் கண்டித்து, வலி. வடக்கு பிரதேச மக்களின் பிரதிநிதிகள் ஒட்டுமொத்த மக்கள் சார்பாகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இந்தப் பேரணியை மேற்கொள்ளவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment