அனைத்து பாடசாலைகளிலும் சகல மாணவர்களுக்குமான வகுப்புக்கள் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன என கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தல் விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் கட்டங்கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடைநிலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை.
எனவே மாணவர்களின் நன்மை கருதி அனைத்து வகுப்புக்களும் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLanka News