வலுவான வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க பசில் தயார்!

Basil Rajapaksa

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு வலுவானதாக சமர்ப்பிப்பதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார்.

வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குக மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Exit mobile version