plastic
செய்திகள்உலகம்

பொலித்தீன் பொதிசெய்து பழங்கள், காய்கறிகள் விற்பனைசெய்யத் தடை!

Share

கழிவுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (loi anti-gaspillage de 2020) சந்தைகள், கடைகளில் இனிமேல் பழங்கள்,மரக்கறிகள் என்பவற்றை பிளாஸ்ரிக் பொதிகளில் வைத்து விற்பது தடைசெய்யப்படுகிறது

பிரான்ஸில் நாடு முழுவதும் இச்சட்டம் ஜனவரி முதல் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

அப்பிள், பேரிக்காய், வாழைப்பழம், தோடம்பழம் ,கிளெமென்டைன், கிவி, மாண்டரின், எலுமிச்சை, திராட்சைப்பழம், புறூண் , முலாம்பழம், அன்னாசி, மாம்பழம், காக்கிப் பழம்,கொடித்தோடை போன்றவற்றையும், லீக்ஸ், சீமைச் சுரைக்காய், கத்தரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு, கரட், வட்டத்தக்காளி, வெங்காயம், கோவா, சூபிளவர், முள்ளங்கி, வேர்க் கிழங்குகள் உட்பட பலமரக்கறிகளையும் பிளாஸ்ரிக் பைகள், பெட்டிகளில் விற்பபனை செய்வது தடைசெய்யப்படுகிறது.

ஆயினும் இச் சட்டத்தில் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குச் சில தளர்வுகள் இருக்கும். 1.5 கிலோக் கிராமுக்கு மேற்பட்ட நிறையுடைய பழங்களையும் மரக்கறிகளையும் தொடர்ந்தும் பிளாஸ்ரிக் பக்கெற்றுகள், பைகளில் பொதி செய்து விற்பதற்கு 2023 ஆம் ஆண்டு வரை அனுமதிக்கப்படும். அதேபோன்று பைகளில் இல்லாமல் மொத்தமாக விற்பதால் சேதமடையக்கூடிய சிவப்புப் பழங்கள் போன்றவற்றை 2026 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் பிளாஸ்ரிக்கில் பொதியிடலாம்.

சட்டத்தை மீறி பிளாஸ்ரிக் பக்கெற்றுகளில் பழங்கள், மரக்கறிகளை விற்பது அபராதத்துக்குரிய குற்றமாகும். நாள் ஒன்றுக்கு 1,500 ஈரோக்கள் முதல் 15, 000 ஈரோக்கள் வரை அபராதத் தொகையாகச்செலுத்த நேரிடலாம்.

வெளியே தெரியக் கூடியவாறு கண்ணாடி பிளாஸ்ரிக் உறைகளில் பழங்கள், காய்கறிகளை வாங்கிப் பழக்கப்பட்டவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்தப்புதிய சட்டம் பல சிரமங்களை ஏற்படுத்துகின்ற போதிலும் பிளாஸ்ரிக் கழிவுகளை குறைப்பதில் பெரும் முன்னேற்றத்தை
ஏற்படுத்தும்.

பிளாஸ்ரிக் பைகளுக்குப் பதிலாக கடதாசிப் பைகள், கடதாசி மட்டைப் பெட்டிகள் பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதால் அவற்றுக்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...