முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் கைதுசெய்யப்பட அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பிணையில் விடுதலையாகியுள்ளார்.
முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பீற்றர் இளஞ்செழியன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பீற்றர் இளஞ்செழியன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.இளஞ்செழியன் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகியதைத் தொடர்ந்து இளஞ்செழியன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சட்டத்தரணி தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews