ஆயுள்வேத மசாஜ் நிலையங்களை ஒழுங்குமுறையில் செயற்படுத்த விரைவில் புதிய விதிகள் கொண்டு வரப்படும் என ஆயுர்வேத ஆணையகத்தின் வைத்தியர் எம்.டி.ஜே அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (09) காலை சர்வதேச சுதேச மருத்துவம் தொடர்பான ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் மசாஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் இல்லை. ஆனால் அதனை ஒழுங்குபடுத்துவதற்கு விரைவில் புதிய விதிகள் கொண்டு வரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews