அவுஸ்திரேலியா நண்டுகளால் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
அவுஸ்திரேலியா- கிறிஸ்துமஸ் தீவில், பார்க்கும் இடமெல்லாம் சிவப்பு நிற நண்டுகளாக காட்சியளிக்கின்றன.
அரசு அலுவலர்கள், பாதுகாப்புக்காக சாலையோரமாக தடுப்புகளையும், தற்காலிகமாகப் பாலங்களையும் நண்டுகளின் பாதுகாப்பிற்காக அமைத்துள்ளனர்.
தீவின் ஒரு பகுதியில் இருந்து புறப்படும் நண்டுகள் மறுபுறம் உள்ள இந்தியப் பெருங்கடலுக்குச் சென்று இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இதற்காக சுமார் 5 கோடி நண்டுகள் இடம் பெயர வாய்ப்பு உள்ளதாக தீவின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
இது நண்டுகளின் இனப்பெருக்கக் காலம். ஒக்டோபர், நவம்பர் மாதங்களில், இந்த சிவப்பு நண்டுகள் காடுகளிலிருந்து கடலை நோக்கி கூட்டம் கூட்டமாக இடம்பெயரும்.
சரியாக இந்த காலகட்டத்தை கணித்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் ஆண் நண்டுகள், வழியில் தங்கள் துணையான பெண் நண்டுகளை அழைத்துக்கொண்டு கடலை நோக்கிப் பயணிக்கின்றமை ஆச்சரியமே…..
#world
Leave a comment