அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மெல்போர்ன் நகரில் கடந்த 262 நாட்களாக பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தற்போது இந்த பொது முடக்கம் ரத்துசெய்யப்படுகிறது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனாத் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 9 மாதங்களாக முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. பொது முடக்கத்தை ரத்துசெய்யக் கோரி மக்கள் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், தற்போது பொது முடக்கம் ரத்துசெய்யப்படுகிறது என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#World
Leave a comment