ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சட்டத்தரணி மணிவண்ணன் கண்டனம்

mani

நேற்றுக் காலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகங்களே உண்மைச் செய்திகளை சமூகத்திற்கு கொண்டு செல்லும் மகத்தான பணியை செய்து வருகின்றன. இந்த நிலையில் ஊடகங்கள் சுயாதீனமாகவும் அச்சுறுத்தல் இன்றியும் செயற்பட வேண்டியன.

ஊடகங்களை அச்சுறுத்துவதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாகும் – எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version