கிராம மக்கள் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்துச் சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டதாகவும், கிராமத்தினர் 11 பேரை பிடித்து இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இச்சம்பவம் குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதேவேளை, கடந்த 5ஆம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்திருந்திருந்தனர்.
இந்தநிலையில் இச்சம்பவமானது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WorldNews