கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் விபரங்களைத் திரட்டி அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களை நினைவு கூரும் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகப்பிரிவினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேலேயே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்று திருநகர் பகுதியிலும் அதை அண்டிய பகுதியிலும் இராணுவத்தினர் விபரங்களைத் திரட்டி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews