யாழ்.கீரிமலை பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கும் பணி நாளை இடம்பெறவுள்ளது.
இதன்படி, தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டேயர் அளவிலான காணி கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பட உள்ள நிலையில், அதற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.
குறித்த அளவீட்டு பணிகள், நாளை காலை .8.30 மணியளவில் கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் இடம்பெறவுள்ளன.
காணி உரிமையாளர்களின் சம்மதம் இல்லாமலேயே இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைத்து இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
#SrilankaNews