உடுப்பிட்டி கிராமத்தில் இராணுவம் குவிப்பு!

ar

உடுப்பிட்டி கிராமத்தில் இராணுவம் குவிப்பு!

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறிய நிலையில், பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாள்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது.

இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரில் இராணுவத்தினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

 

Exit mobile version