பொலிஸாருக்கு உறுதுணையாகவே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தயாராகி வரும் நிலையில், நாட்டினது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இராணுவத்தின் கடமையாகும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் முன்னிற்போம். இதன் காரணமாகவே யாழ் நகரில் இன்று இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது.
சட்ட ஒழுங்கை பாதுகாக்க பொலிஸார் செயற்படும் அதேவேளை, அவர்களுக்கு உதவும் வகையிலேயே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர் – என்றார்.
#SriLankaNews