afc7bfa3ffe3a811c10d2a99a13c93fb XL
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இவர்கள் தான் காரணமா?

Share

இலங்கையின் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு சடுதியாக குறைந்த புகையிலை பாவனையும் காரணமாக கொள்ளப்படுகிறது.

2015 ஆம் ஆண்டளவில் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 15 வீதத்தில் இருந்து தற்போது 9.1 வீதம் வரை குறைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புகையிலை பாவனையால் உலகில் நாளொன்றிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கின்றனர். அவர்களில் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் தொடர்ச்சியாக நாள்தோறும் புகைப்பிடிப்பவர்கள்.

நாட்டில் புகையிலை உற்பத்திக்கான தற்போதைய வரிவிதிப்பு அமைப்பு முறைசாரானது மற்றும் சிக்கலானது.

புகையிலைக்கான சரியான வரிவிதிப்பு சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அதிகாரசபையானது, 2020 ஆம் ஆண்டில் ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது.

இதன்படி, வரி விதிப்பு சூத்திரம் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சிகரெட்டுகளுக்கான புதிய வரி மற்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிவிதிப்பு தொடர்பான இந்தப் புதிய தொகுதியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் புகைப்பிடிப்பதில் ஈடுபடுவதைக் குறைக்க முடியும்.

மேலும், புகைபிடிப்பதினால் ஏற்படும் சுகாதார கேடுகளை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதுடன், அரசாங்க வருமானத்தையும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...