எரிபொருள் கட்டணத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்தால், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து தொழிலை நடத்துவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார். எரிபொருள் விலை எவ்வளவு உயரும்? அந்த விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தையும் உயர்த்துவோம் எனவும் அதற்கு வேறு மாற்றுவழி எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்து தொழில் இன்று ஸ்தம்பித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
டயர்கள் விலை அதிகம். மேலும், பேருந்துகளில் வேலை செய்ய ஊழியர்கள் இல்லை. லீசிங் கட்டுவதே கடினமாக உள்ளது எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
#SrilankaNews