அச்சுறுத்தப்பட்டால் 119 க்கு முறையிடவும்!

Sri Lanka police

இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் அது தொடர்பாக உடனடியாக முறைப்பாடு வழங்குக.

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிபர் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் இணையவழி கற்பித்தல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் 118  அல்லது  119 எனும் இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு, அவ் விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version