1752489511 cc
செய்திகள்அரசியல்இலங்கை

அனுர மீட்டர் 2025: ஜனாதிபதியின் 30 முக்கிய வாக்குறுதிகளின் தற்போதைய நிலை என்ன?

Share

அனுர மீட்டர்’ (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதேவேளை, மேலும் 10 வாக்குறுதிகள் முன்னேற்றத்தில் உள்ளன, 9 வாக்குறுதிகளில் முன்னேற்றம் இல்லை, மற்றும் ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது.

இந்த மதிப்பீடானது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட 30 முக்கிய வாக்குறுதிகளைக் கண்காணித்துள்ளதுடன், 2026 வரவு-செலவுத் திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது; எனினும், இது ‘டிட்வா’ (Ditwah) சூறாவளிக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டது.

அனுர மீட்டரினால் கண்காணிக்கப்படும் வாக்குறுதிகள் பொதுமக்களின் அதிக ஆர்வம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை பொருளாதார சீர்திருத்தம், ஆளுமை, ஊழல் எதிர்ப்பு, சட்டமும் ஒழுங்கும் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய கொள்கைப்பரப்புகளை உள்ளடக்கியுள்ளன.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக Manthri.lk முன்னெடுக்கும் ஒரு சிறந்த முயற்சியே இந்த ‘அனுர மீட்டர்’ ஆகும். இதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை முறையே ‘மைத்திரி மீட்டர்’ (Maithri Meter) மற்றும் ‘கோட்டா மீட்டர்’ (Gota Meter) ஊடாக Manthri.lk கண்காணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுர மீட்டரில் கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில் ஏழு வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என விரும்பும் மேலதிக வாக்குறுதிகளை முன்மொழியுமாறு Manthri.lk பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

Manthri.lk என்பது இலங்கையின் ஒரே பாராளுமன்ற கண்காணிப்பு தளமாகும். இது இலங்கையின் மிகப்பெரிய சுயாதீன சிந்தனைக் குழாமான (Think tank) வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. கண்காணிப்படும் அனைத்து வாக்குறுதிகள் தொடர்பான முழுமையான விபரங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்: https://manthri.lk/ta/anura-meter

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...