சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த பிரதான சூத்திரதாரியாக கருதப்பட்ட மற்றுமொரு நபர் நேற்றைய தினம் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஹிகுல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சந்தேக நபர் கண்டி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
#SriLankaNews