கொவிட்டால் மேலும் 144 பேர் பலி!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் கடந்த 11ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட ஒரு பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 16 ஆண்களும் 5 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 61 ஆண்களும் 61 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 296ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்றைய தினம் இரண்டாயிரத்து 641 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்படி, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 85 ஆயிரத்து 921ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version