பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

New Project 29

பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் நேற்று (02) சகல மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் இடம்பெற்று வந்த கலந்துரையாடல்களுக்கமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளில் (1-5) ஆரம்ப பாடசாலைகள், 100 மாணவர்களுக்குக் குறைவான பாடசாலைகள் என 3,000 வரையான பாடசாலைகளை வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய மீள திறப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Exit mobile version