நிறுத்தி வைக்கப்பட்ட காரில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இவ்விபத்து சம்பவம் இன்று காலை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்தில் 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews