இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முகங்கொடுத்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை நாம் அறிவோம். அவர்கள் விரக்தி அடைந்துள்ளதை ஏற்கிறோம். கொரோனா நிலைமையினால் ஏற்பட்ட இந்த பின்னடைவு விரைவில் சீராகும். மக்களின் நிலை குறித்து கவலையடைகிறோம்.
எம்மால் என்ன செய்ய முடியும். அரசின் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். வரிசையில் உள்ள மக்களின் சிலிண்டர்களை தூக்கினால் அவர்களின் சுமை குறையுமா? இந்த பிரச்சினைகளுக்கு தந்திரோபாயமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் நிலைமை சீராகும் என நம்புகிறோம்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
#Srilankanews
Leave a comment