ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வக்கட்சி மாநாட்டை நடத்துமாறு ஜனாதிபதியிடம், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews