நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் பந்தல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை தேசிய பிரச்சினையாகக் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் நோக்கத்தை மறந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் எதிரணிகளின் நிலைப்பாடு இன்னும் வெளியிடப்படவில்லை.
#SriLankaNews