நாட்டில் நிலவும் அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, நாளை முதல் (நவம்பர் 28) அனைத்துப் பாலர் பாடசாலைகளும் (Nurseries) மற்றும் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் (Pre-schools) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அந்த அனர்த்த நிலைமைகள் தணியும் வரை இந்த நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். இந்த அறிவிப்பை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் வெளியிட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.