இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்களையும் மூடுமாறு மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அறிவித்துள்ளார்.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி, கல்முனை மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள மாட்டிறைச்சி கடைகள், கோழியிறைச்சி கடைகள், ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்
மாநகர சபையின் இந்த அறிவிப்பை மீறிச் செயற்படும் விற்பனை நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.