இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் அபாயகரமான அளவில் யுரேனியம் (Uranium) இருப்பது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
40 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் கண்டறியப்பட்டுள்ளன.
செய்யப்பட்ட குழந்தைகளில் 70% மானோர், தாய்ப்பால் மூலம் யுரேனியம் வெளிப்பாட்டால் ஆரோக்கிய அபாயத்தைக் கொண்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் (AIIMS, Delhi) இணைப் பணிப்பாளரான வைத்தியர் அசோக் சர்மா தெரிவித்தார்.
யுரேனியம் வெளிப்பாடு குழந்தைகளுக்கு சிறுநீரகம், நரம்பியல் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன்களைப் பாதிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டறியப்பட்ட யுரேனியம் செறிவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குக் கீழே உள்ளதால், இதன் உண்மையான தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
எனவே, மருத்துவ ரீதியாக வேறுவிதமாகக் குறிக்கப்பட்டாலொழிய, தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வதுதான் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் வைத்தியர் அசோக் சர்மா வலியுறுத்தினார்.
இந்த யுரேனியம் மாசுபாடு பெரும்பாலும் நிலத்தடி நீர் மூலமாகப் பரவுகிறது என்றும் அவர் கூறினார்.
இது குறித்துப் பிற மாநிலங்களிலும் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் வைத்தியர் அசோக் சர்மா தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.