சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மங்கோலியாவுக்குத் திருப்பி விடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏர் இந்தியா AI 174 விமானம் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டு, கொல்கத்தா வழியாகப் புதுடில்லி வந்து சேர வேண்டிய விமானம். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர்த் தரையிறக்கத்தினால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்பது குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

