அரசாங்கத்தின் மோசமான சுகாதார நிர்வாகத்தால் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படலாம் என இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
ஆனால் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தங்களது உயிர்களை பணயம் வைத்து செயற்படும் சுகாதாரத் துறையினருக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களைகூட அரசாங்கம் இல்லாது செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் சுகாதார ஊழியர்கள் 8 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.