போதியளவு எரிபொருள் கையிருப்பில்! – யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன்

makeshan

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மக்களுக்கு தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” – இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாள்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என்ற எண்ணத்தில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் 14 சதவீத பெற்றோல் மற்றும் 29 சதவீத டீசல் தேவைகளை மட்டுமே நிறைவு செய்கிறது. எனவே இந்த எரிபொருள் நிரப்பு நிலைய பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக இடம்பெறுகிறது” என்றார்.

காங்கேசன்துறை தொட்டியில் பெற்றோல் 92 ஒக்ரைன் – 155 ஆயிரம் லீற்றர், டீசல் – 2,600,000 லீற்றர்
மண்ணெண்ணெய்- 165,000 லீற்றர் நாளைய தினம் வழங்கப்படவுள்ளது – என்றார்.

#SriLankaNews

Exit mobile version