இலங்கையில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர், தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகம் துரிதமாக நடைபெற்று வருகின்றது. களஞ்சியசாலைகளிலும் போதுமான எரிபொருள் காணப்படுகின்றது.
எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை. எனவே வீணாக மக்கள் குழப்பமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட வேண்டாம்.
நாட்டுக்குத் தேவையான எரிபொருள் தற்போது எமது கிடங்குகளில் உள்ளது என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.
மேலும் நாளை 36,000 மெட்ரிக் தொன் பெற்றோலை இறக்குமதி செய்யவுள்ளோம்.
எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் 40,000 மெற்றிக் தொன் டீசல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றும் இதன்போது தெரிவித்தார்.
#SriLankaNews