நாடளாவிய ரீதியில் மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை!

Rights to Information

கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, இவ்வாறான மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி யாழ்.மாவட்டத்தை மையமாக வைத்து மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அண்மையில் ஆரம்பமானது.

இன்னும் சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தகவல்களை வழங்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதிகளவான மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராக கணிசமான எண்ணிக்கையிலான மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version