மேல் மாகாணத்தில் தொடரும் அதிரடி! – விசேட நடவடிக்கையில் பொலிஸார்

Police Curfew

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று காலை 6 மணி தொடக்கம் – மாலை 6 மணி வரை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசேட நடவடிக்கையில், பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றில் பயணித்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, முகக்கவசம் அந்நியமாய் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத
சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக, முகக்கவசம் அணியாத 4 ஆயிரத்து 351 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், முறையாக முகக்கவசம் அணியாத 9 ஆயிரத்து 658 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version