க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் அதி விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.donets.lk என்ற இணையதளத்திற்கு சென்று சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் அனுமதி அட்டையின் நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
அதேபோல் அனுமதி அட்டையில் பெயர் ,பாடம் மற்றும் மொழி ஆகியவற்றினையும் ஆன்லைன் மூலம் திருத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர 2021 பரீட்சை பெப்ரவரி 7 முதல் மார்ச் 5 வரை நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 439 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
#SrilankaNews
Leave a comment