வலிவடக்கு பிரதேசத்தின் நகுலேஸ்வரம் மற்றும் காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர்கள் பிரவில் உள்ள 30க்கும் அதிகமானோரின் 25க்கும் அதிக ஏக்கர் காணி இலங்கை அரச படைகளின் தேவைகளுக்காக நாளைய தினம் சுவீகரிக்கப்படவிருக்கிறது.
காங்கேசன்துறை மேற்கு பிரதேசத்தில் மட்டும் 26 பேருக்கு சொந்தமான 19 ஏக்கருக்கும் அதிக காணி அளவிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினரும் சமூக செயற்பட்டாளருமாகிய சஜீவன் கருத்து வெளியிடுகையில் , பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் திட்டமிட்டபடி அரசால் சுவீகரிக்கப்படுகிறது.
இதன் அடுத்த கட்டமாக அரச இயந்திரத்தின் பூரண ஆதரவுடன் வடக்கின் பெறுமதியான காங்கேசன்துறை துறைமுகமும் அதனுடன் இணைந்த கீரிமலை புனித பூமி பகுதியில் உள்ள காணிகளும் நாளைய தினம் அளவிடப்பட விருக்கிறது.
எனவே காணி உரிமையாளர்கள் , தமிழ்த்தேசிய பற்றாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த அளவீட்டு நடவடிக்கையை முறியடிக்க ஒன்றிணையுமாறு பகீரங்க அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
#SriLankaNews